ஊடலுவகை – 02

வணக்கம் தோழமைகளே!

கதைக்கு ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!!… சில கேள்விகள் திரும்ப திரும்ப வருவதால் பொதுவாக பதிலளித்து விடுகிறேன்.

negative விமர்சனங்கள் – முந்தைய கதையில் என்னுடன் பயணித்தவர்களுக்கு தெரியும், நிச்சயம் நான் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டேன். உங்கள் மனதில் பட்டதை தாராளமாக தெரிவிக்கலாம்.

கதையை நிறுத்துவது – கண்டிப்பாக இடையில் கதையை நிறுத்த மாட்டேன். பெரும்பாலும் சொன்ன நேரத்திற்குள் கதையை தர முயற்சி செய்வேன். அதனால் அது குறித்து கவலை வேண்டாம்.

அதிக அப்டேட்கள் – சென்ற கதை எழுதிய பொழுது விடுமுறையில் இருந்ததால் கொடுக்க முடிந்தது. இப்பொழுது மீண்டும் வேலையில் இணைந்து விட்டதால், வாரம் ஒரு பதிவு வீதம் தருகிறேன். இதை நீங்க பொறுத்துக் கொள்ளவும் please…

OU_cover

ஊடலுவகை – 02

இந்த கதையில் நான் ‘காமெடி’ முயற்சி செய்கிறேன். எப்படி வருகிறது என தெரியப்படுத்தினால் மகிழ்வேன். இனி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை கதை பதிவு செய்யப்படும்.

அன்புடன்,
யாழ்வெண்பா

Advertisements

ஊடலுவகை – 01

வணக்கம் தோழமைகளே!

முதல் அத்தியாயம் மட்டும் முன்னோட்டம் போல தருகிறேன்… உங்களுக்கு பிடித்து இருக்கிறதா என்று கூறுங்களேன்!

OU_cover
ஊடலுவகை – 01

இயன்றவரை வாரம் ஒரு பதிவுடன் வந்து விடுகிறேன். இல்லை ஓரளவு எழுதிவிட்டு காலம் தாமதிக்காமல் பதிவு தருவதா? அதையும் தெரிவித்துவிடுங்கள்.

அன்புடன்,
யாழ்வெண்பா

ஊடலுவகை

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்…

உங்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்…
என்னுடைய முந்தைய கதைக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள்…

இந்த நன்னாளில் எனது மூன்றாம் கதை அறிவிப்போடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

தலைப்பு : ஊடலுவகை
OU_cover

இது திருக்குறளில் ஒரு அத்தியாயத்தின் தலைப்பு. தலைப்பிலேயே புரிந்திருக்கும், இது ஊடலால் பின்னப்பட்ட ஒரு உறவு.

ஆம் ஊடலும் உவகை (மகிழ்ச்சி) தான்… அதை உணர்ந்து கொள்ள நம் நாயகன், நாயகி செய்யும் காதலை இல்லை… இல்லை… ஊடலை காண்போம் வாருங்கள்…

யுகேந்திரன், ரிதன்யா இக்கதையின் நாயகன், நாயகி… அவர்கள் இருவரின் ஊடலும், அதற்குள் ஒளிந்திருக்கும் நேசத்தையும் காண என்னோடு பயணியுங்கள்…

இந்த கதைக்களம் உங்களுக்கு பரிட்சயம் தான். ஏதோ எனக்கு தோன்றிய அளவு, என் எழுத்துக்களில் நீங்கள் விரும்பும் வண்ணம் படைக்க விரும்புகிறேன்.

விரைவில் கதையுடன் சந்திக்கிறேன். நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

அன்புடன்,
யாழ்வெண்பா

வேந்தர் மரபு – FINAL

வணக்கம் தோழமைகளே,

addtext_com_MDYxMzA2OTMy

கதையின் அடுத்த அத்தியாயங்கள்…

வேந்தர் மரபு – 59
வேந்தர் மரபு – 60 FINAL

சந்தோசம்! சந்தோசம்! சந்தோசம்! ,இது ஒற்றை வார்த்தையில் அடங்க கூடியது இல்லை நண்பர்களே! அத்தனை மகிழ்ச்சி….


முதல் கதையை முடித்த பொழுது, எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. பல கதை கருக்கள் தோன்றிய பொழுதிலும் அமைதி காத்தேன். ஆனால், இந்த கதைக்கரு தோன்றியதும் எழுதாமல் இருக்க முடியவில்லை. சரி இப்பொழுது எழுத மட்டும் தொடங்குவோம், பிறகு மெதுவாய் பதிவிடுவோம் என்று நினைத்தேன்.


ஆனால், கடவுளின் ஆசியினால், என்னால் தொய்வின்றி எழுத முடிந்தது, இப்பொழுது கதையும் நிறைவு பகுதியை எட்டி விட்டது. உண்மையில் எனக்கு எழுத்து பழக்கம் இல்லை.  இதுவரை கவிதை மட்டுமே முயற்சித்திருக்கிறேன், அதுவும் போட்டி சமயங்களில்…


‘என்னால் முடியுமா?’ என்னும் சந்தேகத்தோடு இரண்டாம் கதையிலேயே சரித்திரத்தை எடுத்து விட்டேன். உங்கள் ஆதரவு மட்டுமே நம்பிக்கை அளித்தது. உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்…


நான் ஏதேனும் குறையாக எழுதி இருந்தால், உங்களுக்கு நிறைவு கிடைக்காவிட்டால் சுட்டிக் காட்டுங்கள், பதிப்பகத்திற்கு அனுப்பும் முன்னர் சரி செய்து விடுகிறேன்.


மூன்றாம் கதையின் அறிவிப்போடு விரைவில் உங்களை சந்திக்கிறேன். நன்றி! நன்றி! நன்றி!

அன்புடன்,
யாழ்வெண்பா