ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 05

வணக்கம் நண்பர்களே,

ரோகிணி அறியாத சந்திரனின் இன்னொரு முகம்…

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 05

நிறை, குறைகளை மறவாமல் தெரிவியுங்கள்…அடுத்த அத்தியாயம் சனிக்கிழமை…

அன்புடன்,
யாழ்வெண்பா

Advertisements

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 04

வணக்கம் நண்பர்களே,

சில மகிழ்வான தருணங்களும், மெல்லிய ஏமாற்றமும்…
மறக்காமல் கருத்துக்களை சொல்லிவிட்டு போங்க friends…

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 04

நிறை, குறைகளை மறவாமல் தெரிவியுங்கள்…அடுத்த அத்தியாயம் திங்கட்கிழமை…

அன்புடன்,
யாழ்வெண்பா

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 03

வணக்கம் நண்பர்களே,

நான் முன்பே கூறியது போல, கதை கொஞ்சம் அழுத்தமானது தான், பெண்ணின் மெல்லிய உணர்வுகள், அவள் மனம் படும் காயங்கள் என்பனவெல்லாம் வரும்… இதுபோல எல்லாம் பிடிக்காதவர்கள் தவிர்த்து விடுங்கள்…

கணவனை ஆவலுடன் சரணடையும் ரோகிணியின் நிலையறிய மூன்றாம் அத்தியாயம்…

49896624_2048531905233269_4532417711170387968_o

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 03

நிறை, குறைகளை மறவாமல் தெரிவியுங்கள்… நன்றி!!!

அன்புடன்,
யாழ்வெண்பா

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 02

வணக்கம் நண்பர்களே,

ஒவ்வொரு அத்தியாயத்தையும் உங்களுக்கு தரும் பொழுதும், தேர்வு எழுதி காத்திருக்கும் மாணவியின் நிலைதான். ஆகையால், மறவாமல் குறைகளை சுட்டிக்காட்டுங்கள்.

49896624_2048531905233269_4532417711170387968_o

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 02

குறை, நிறைகளை மறவாமல் தெரிவியுங்கள்… நன்றி!!!

அன்புடன்,
யாழ்வெண்பா

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 01

வணக்கம் நண்பர்களே,

அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!

இப்பொழுது தான் தொடங்கியது போல இருக்கிறது அதற்குள் நான்காம் கதையின் தொடக்கம். நம்ப முடியவில்லை என்பது ஒருபுறம், ஆனால் இன்னும் எனக்குள் ஒரு தைரியம் வரவில்லை. ஒவ்வொரு முறையும் சரியாக எழுதி இருக்கிறேனா என்கிற தயக்கம் வந்துவிடுகிறது. ஆகையால் மறக்காமல் நிறை, குறைகளை சுட்டிக்காட்டி எனது தவறுகளை சரி செய்ய உதவுங்கள் friends. நன்றி!!!

கதையின் தலைப்பு: ஏங்கிய நாட்கள் நூறடி தோழி

49896624_2048531905233269_4532417711170387968_o

எப்பொழுதும் வள்ளுவர், பாரதி, குறுந்தொகை என தலைப்பிற்காக ஆராய்வேன். இந்த முறை கண்ணதாசன் அவர்களின் வரி பேருதவி புரிந்து விட்டது.

இந்த கதையின் சுருக்கம்,

அதிக கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்ட நாயகன்… சொந்த காலில் நிற்கும் பொழுது அனைத்து கட்டுப்பாடுகளையும் மீறி பெற்றோர்களை வெறுத்து தான்தோன்றி தனமாக வாழ்கிறான்.

சிறு சிறு விசயத்திற்கும் பிறரை சார்ந்து வாழும் நாயகி… மற்ற சராசரி இளம்பெண்களைப் போன்று எண்ணற்ற கனவுகளுடன் அவனின் கரம் பற்றுகிறாள்… நாயகனின் வாழ்வில் மனைவியாக அவனை சார்ந்து, அவன் நிழலில் வாழ… தெரியாத நாடு, புரியாத மொழி, அந்நிய பழக்கவழக்கங்கள் கொண்ட நாட்டிற்கு அவனை மட்டுமே நம்பி வருகிறாள்.

அனைத்து பெண்களைப் போன்று எண்ணற்ற கனவுகளுடன் திருமண வாழ்வில் நுழைபவள்… சுயநலமான பெற்றோர்களால் கல்வியை மட்டுமே திணித்து வளர்க்கப்பட்ட நாயகனின் தான்தோன்றி தனமான வாழ்வை எப்படி எதிர்கொள்கிறாள்? என்பதே இதன் கதை.

அவள் கல்யாண வாழ்வின் கனவுகள் முழுவதும் சிதையும் விதம், அதைக்கூட உணராத நாயகன், வாழ்வே வெறுத்து போய் அவள் எடுக்கும் முடிவு, அதனால் நாயகன், நாயகியின் நிலை? என்பனவறிற்கு விடையாய் “ஏங்கிய நாட்கள் நூறடி தோழி”

முந்தைய கதை “ஊடலுவகை” மூலம் உண்மையின் மகத்துவத்தையும், ஒரு தவறான முடிவை தொடர்வதின் ஆபத்தையும் எனக்கு தெரிந்த அளவில் தெரியப்படுத்தினேன். அந்த கதையை படித்த வாசகி ஒருவர் 2019 புத்தாண்டிலிருந்து ‘எனக்கு பிடித்தவர்களிடம் உண்மையை பேசப் போகிறேன்’ என்று கூறியது எனக்கு எல்லையற்ற மகிழ்வை தந்தது.

அதுபோலவே இந்த கதையில் குழந்தை வளர்ப்பின் ஒரு சிறு அங்கத்தை தொட நினைக்கிறேன். கதையின் முடிவில் அதை சரியாக கூறினால் மிகவும் மகிழ்வேன். பதிவுகள் திங்கள் மற்றும் சனிக்கிழமை போடப்படும்.

இந்த கதையை ‘கதை மதுரம்’ போட்டிக்காக எழுதுகிறேன் friends. மறவாமல் நிறை குறைகளை கூறுங்கள் friends… நன்றி! நன்றி!! நன்றி!!!

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 01

அன்புடன்,
யாழ்வெண்பா