நிசப்த மொழி – 04

வணக்கம் நட்புக்களே!

சோகத்தை எல்லாம் ஓரமாக வைத்து விடலாம். இதோ கயல்விழி வந்தாச்சு 🙂

PhotoText

நிசப்த மொழி – 04

அன்புடன்,
யாழ்வெண்பா

Advertisements

நிசப்த மொழி – 03

வணக்கம் நட்புக்களே!

பூர்ணிதாவை இந்த எபியில் கிளப்பி விட்டுட்டேன். இனி கயல்விழி வந்து, இந்த அழுத்தமானவனை தன் நேசத்தால் அரவணைத்து, காதல் கணவனாக மாற்றி விடுவாள் என நம்புவோமாக 🙂

PhotoText

நிசப்த மொழி – 03

Waiting for your feedback and suggestions 🙂

அன்புடன்,
யாழ்வெண்பா

நிசப்த மொழி – 02

வணக்கம் நட்புக்களே!

முந்தைய அத்தியாயத்திற்கு பேராதரவு தந்த அனைவருக்கும் எனது நன்றிகள்

PhotoText

நிசப்த மொழி – 02

உங்களது கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்,
யாழ்வெண்பா

நிசப்த மொழி – 01

வணக்கம் நட்புக்களே!

உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றிகள் பல. முதல் அத்தியாயம் பதிவு செய்திருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறவாமல் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்…

சற்று சிறிய அத்தியாயம் தான். ஆனால், இதில் சொல்ல நினைத்த விஷயம் இவ்வளவு தான். தேவை இல்லாமல் பெரிது படுத்தவோ, இழுக்கவோ எனக்கு விருப்பம் இல்லை. kindly co operate dear readers 🙂

PhotoText

நிசப்த மொழி – 01

அன்புடன்,
யாழ்வெண்பா

நிசப்த மொழி – teaser

வணக்கம் நட்புக்களே!

அனைவரும் நலமா? அழகான விடுமுறைக்கு பின்பு மீண்டும் நானே!

இந்தமுறை தொடங்கவிருக்கும் கதை ஒரு வித்தியாசமான முயற்சி. சற்று கடினமாகவும் இருக்கிறது. எவ்விடத்தில் இம்மி பிசகினாலும், கதாபாத்திரங்களின் குணம் கீழிறங்கி காட்டப்பட்டு விடும். அதற்கு சற்று நேர இடைவெளி தேவைப்படுகிறது. ஆக, அடிக்கடி அத்தியாயங்கள் தர இயலாது. கூடவே, என்னால் குழந்தைகள், வேலை இதற்கு மத்தியில் நேரத்தையும் சரிகட்ட முடியவில்லை. ஆக, ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் சிறு இடைவெளி அவசியம். அதற்கு உங்கள் துணை அவசியம். வழக்கம்போல உடன் இருந்து தட்டி கொடுத்து வழி நடத்துங்கள் 🙂

கதையின் தலைப்பு : “நிசப்த மொழி”

PhotoText

கதைக்களம் :

தோல்வியில் முடிந்த ஒரு காதல்… காதலின் முடிவு என்னவாய் இருக்கும் என தெரிந்ததாலோ என்னவோ, வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாமல் ஒதுங்கி சென்ற காதல்???

வார்த்தைகளால் தானே வெளிப்படுத்தவில்லை? அடி மனதின் ஆழத்தில் புதைந்திருக்கிறதே? அதன் நிலை? அதன் எதிர்பார்ப்பு?

நேரில் பார்க்கும் வரை கூட, அவ்வப்பொழுது உறுத்திக் கொண்டிருக்கும் விஷயம்? நேரில் கண்ட பின்னால்? அதிலும் நலமாக இல்லை என்று தெரிந்த பின்னால்? அநாதரவாக இருக்கும் நிலையை தெரிந்து கொண்ட பின்னால்?

இதுதான் கதைக்களம். இயன்றவரை நல்ல முறையில் படைப்பினை தர முயற்சி எடுக்கிறேன்.
###

இதுவரை டீசர் என்று எதையும் முயற்சித்ததில்லை… இந்த முறை சிறு முயற்சி… உங்களில் பலர் ஏற்கனவே படித்தது தான்… படித்துவிட்டு எப்படி இருக்கிறது என்று கூறுங்கள்.

*** “எப்படி இருக்க?” இரண்டே வார்த்தைகள் இதை கேட்பதற்குள் பூர்ணிதாவினுள் இருந்த மொத்த தைரியமும் வடிந்து விடும் போலிருந்தது. சற்று முன் சுதர்ஷனைக் கண்டதும் அவளது விழிகள் அவன் முகத்தில் நிலைகுத்திவிட்டது. மனம் அதிவேகமாய் படபடக்க, நீண்ட நாட்கள் பிரிந்திருந்த குழந்தையை பார்த்ததும் எழும் பரவசம் அவளுள். இமைகள் அதன் வேலையை மறந்ததோ என்னவோ? இமைக்க மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

*** மனம் உந்தித்தள்ள அதை புறக்கணிக்கவே இயலாமல் அதீத படப்படப்போடு குழந்தையை கணவனிடம் நீட்டியவள், “ஏங்க, சுதர்ஷன்… நான் போய் பேசவா?” என அதீத தயக்கத்துடன் திக்கித்திணறி கேட்டுவிட்டு கணவனின் முகம் பார்த்து நின்றாள். அவளுக்கே அது சரியா? தவறா? என்று தெரியவில்லை. மனதின் குடைச்சலும், பாரமும் தாங்க முடியாமல் தான் கேட்டிருந்தாள்.

திவாகரனாலும் அவளுடைய உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது போலும். “ஒருத்தங்க கிட்ட பேசறதுல எதுவும் தப்பிருக்கா?” என்ற பதில் கேள்வியின் மூலம் அவனுடைய சம்மதத்தை மறைமுகமாக வழங்கினான். புரிதல் ஒரு வரம். அந்த வரம் தந்தவனை நன்றி சொல்லி தள்ளி நிறுத்தும் பந்தம் அல்ல அவர்களது. இருவரும் மனமொத்த, ஆத்மார்த்த தம்பதிகள்.

திவாகரன் சம்மதம் தந்ததும், சிறுபிள்ளையின் பூரிப்போடு பூர்ணிதா சுதர்ஷனை நோக்கி விரைந்திருந்தாள். “எப்படி இருக்க?” இந்த இரண்டு வார்த்தைகளை அவனின் முதுகின் பின்புறம் நின்று கேட்பதற்கே அவளின் மொத்த தைரியமும் வடிந்து விடும் போலிருந்தது. இப்பொழுது ‘இவன் என்ன நினைத்துக் கொள்வானோ?’ என்னும் தவிப்பு அவளுள் வந்து ஒட்டிக்கொண்டது.

*** சுதர்ஷன் தான் முதலில் நேசிக்கத் தொடங்கினான். வார்த்தைகளால் பகிர்ந்து கொள்ளாமலேயே பூர்ணிதாவே புரிந்து கொண்டாள். அப்பொழுதிலிருந்து ஏதாவது சண்டையிட்டு அவனிடம் பேசாமல் இருப்பதே அவளுக்கு வேலையாய் இருந்தது.

என்னதான் சண்டை என்றாலும் அதிகம் நீட்டித்ததில்லை. சில மாதங்களில் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கிவிடும். பிறகு அவளாகவே “இதெல்லாம் ஒத்து வராது. எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க” என சொல்ல தொடங்கி விட்டாள்.

ஆனால், ஒருநாளும் அவளால், “உன்னை எனக்கு பிடிக்கவில்லை” என்று சொல்லி புறக்கணிக்க முடிந்ததில்லை. அது ஆழ்மனதில் அவள் சேமித்து வைத்திருந்த ரகசியம். அதை திறந்து பார்க்கும் எண்ணம் அவளுக்கு இருந்ததே இல்லை. ஏனென்றால் விடை என்னவாக இருந்தாலும் இது நடக்க வாய்ப்பில்லை என்பதை அவள் தெளிவாக அறிந்தது தானே!

அவனுக்கும் அவள் நிலை தெரியும். அதனால் தானோ என்னவோ நேரடியாக அவன் காதலை அவளிடம் சொன்னதேயில்லை.
ஆனாலும், அவளின் ஆள் மனதில் ஒரு அடியாளத்தில் அவன் கேள்விக்கான பதில் இருக்கத்தானே செய்யும். அவனை பிடிக்குமா? பிடிக்காதா? என்ற கேள்விக்கான பதிலை, அந்த புதையலை இதுவரை அவள் திறந்து பார்த்ததே இல்லை. அதன் பதில் என்னவாக இருந்தாலும், இது நடக்க வாய்ப்பில்லையே!

அப்படி போற்றி பாதுகாத்து வெளியிட முடியாமல் தவித்த நேசம், குறைந்தபட்சம் அவன் நலத்தை கூடவா எதிர்பார்க்கக் கூடாது.

*** “உனக்கு யாரு பொறுப்பு?” கவலையோடு பூர்ணிதா கேட்க,
“நான் என்ன குழந்தையா? என்னை நானே பாத்துப்பேன்” என்றான் சுதர்ஷன்.

“அப்ப உனக்கு நீயே தான் பொண்ணு பாத்துக்கணுமா? உங்க அண்ணாவால எப்படி இப்படி ஒதுக்க முடியுது?” மனம் ஆராமல் கேட்டவளின் விழிகளில் நீர் சுரந்திரந்தது. அவன் தந்தை இல்லை என அவளுக்கு தெரியும். தாயும் இல்லை என்பதை இப்பொழுது தானே தெரிந்து கொண்டாள். கூடவே அவனது அண்ணனின் ஒதுக்கத்தையும்.

“நான் எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன். அவன் பேசாதேன்னு சொல்லிட்டான்” என உணர்வுகள் ஏதுவுமற்ற குரலில் அவன் கூற, அவளுக்கு தான் அத்தனை தவிப்பாய் போனது. அவன் நலத்தை கூடவா எதிர்பார்க்க கூடாது மனம்? அவனை இந்த சூழலிலா கடவுள் நிறுத்தியிருக்க வேண்டும்?

“என்ன ஆச்சு?”

“சும்மா ஏன் அதையே கேக்கிற. விடு”

“சொல்லேன். அம்மாக்கு என்ன ஆச்சு?”

“விடுன்னு சொன்னேன். என்னால மேனேஜ் பண்ண முடியும்” முடியுமோ, முடியாதோ நான் தான் பார்த்துக் கொண்டாக வேண்டும் என்ற பாவனையில் அவன் கூறுவதாகவே அவளுக்கு பட்டது.

அவன் அவளை உருகி உருகி நேசித்தபோதே அதிகம் பேசாதவன், இப்பொழுது நான்காண்டுகள் கழித்து வந்து நலம் விசாரிப்பவளிடம் பேசிடுவானா என்ன?

“அண்ணா கூட என்ன பிரச்சனை? பணமா? அண்ணியா?” நான்காண்டு திருமண வாழ்க்கை அவளுக்கு குடும்பத்திற்குள் நடக்கும் பூசல்களை புரிய வைத்திருந்தது. அதன் வெளிப்பாடு அவளது பேச்சிலும் எதிரொலித்தது.
அவளை ஆச்சர்யமாய் பார்த்தவன், “அண்ணியா இருக்கலாம். இதை இத்தோட விடு” என்றான் மீண்டும் அழுத்தமாக. கூடவே, “யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். நீ கேட்கவும் சட்டுன்னு சொல்லிட்டேன்” என்றும் சேர்த்து சொல்ல,

“தெரியும்” என்றாள் அவள். முன்பே அவன் ஓரளவு மனம்விட்டு பேசியது அவளிடம் மட்டும் தான். பிற தோழர்களிடம் எப்படியோ தெரியவில்லை. ஆனால், தோழி என்ற வட்டத்தில் அவளைத்தவிர யாருமில்லை. அவளிடம் அந்த மௌனமானவனுக்கு சற்று பேச்சும் வரும்.

“என்ன தெரியும்?” என அவன் பார்க்க, “இதுவரை உன்கிட்ட பேசலை. இப்போ திடீர்ன்னு வந்து கேட்டா, உனக்கு என்கிட்ட சொல்லணும்ன்னு என்ன அவசியம்?” என்றாள் அவள்.
#########

உங்கள் ஆதரவிற்கு நன்றி friends… பரிந்துரைகளை கூறுங்கள்… சுதர்ஷனின் மகிழ்வோடு, திருமணத்தோடு கதை முடியலாம்.
படித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறை, குறைகள் என அனைத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

அன்புடன்,
யாழ்வெண்பா

மொழி பொய்த்த உணர்வுகள் – 27 EPILOGUE

Hi!

Next epi friends 🙂

மொழி பொய்த்த உணர்வுகள் – 27 EPILOGUE

MPU_dp

அன்புடன்,
யாழவெண்பா

மொழி பொய்த்த உணர்வுகள் – 26 FINAL

Hi!

Next epi friends 🙂

மொழி பொய்த்த உணர்வுகள் – 26 FINAL

MPU_dp

அன்புடன்,
யாழவெண்பா